கணியத்தில் தமிழை பயன்படுத்துவதிலுள்ள அடிப்படைச் சிக்கல்கள் எல்லாவற்றிற்கும் முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கிறது இதுவரை வெளியிடப்பட்ட தரப்படுத்தப்பட்ட விசைப்பலகை முதலான முயற்சிகளால் தீர்க்கப்படாத எழுத்துரு, தட்டச்சு ஒழுங்கு போன்ற சிக்கல்களைத் 'தரப்படுத்தலே தேவையில்லை' என்ற நிலையில் முழுமையாகத் தீர்த்து வைக்கிறது. தமிழ் தட்டச்சு விசைப்பலகை, ஒலியியல் விசைப்பலகை என எந்த விசைப்பலகை ஒழுங்கில் தமிழைத் தட்டச்சு செய்வது என்ற பிரச்சினை இனி இல்லை. நீங்கள் விரும்பிய ஒழுங்கை நீங்களே வரையறுத்து தட்டச்சு செய்ய வழிகாட்டுகிறது வரியுருமா. பூபாளம் எழுத்துருவுக்கு ஒரு விசைப்பலகை ஒழுங்கு, இளங்கோ எழுத்துருவுக்கு இன்னோர் விசைப்பலகை ஒழுங்கு, மயிலை எழுத்துருவுக்கு வேறொரு விசைப்பலகை ஒழுங்கு என எழுத்துருக்கள் எத்தனை விதமாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும் கவலைப்படத் தேவையில்லை. வரியுருமாவைப் பயன்படுத்தி நீங்கள் தேர்ந்தெடுத்த அல்லது வரையறுத்த விசைப்பலகை ஒழுங்கிலேயே எல்லா எழுத்துருக்களிலும் தட்டச்சு செய்யலாம். ஒரு எழுத்துருவில் தட்டச்சு செய்ததை இன்னொரு எழுத்துருவில் அச்சிட முடியாது என்ற கவலையும் தேவையில்லை. எந்த எழுத்துருவில் தட்டச்சு செய்யப்பட்டிருந்தாலும் அதை நீங்கள் விரும்பும் எழுத்துருவில், மாற்றித்தருகிறது வரியுருமா. விருப்பம் போல மின்னஞ்சல் அனுப்புவதற்காக யுனிக்கோட் வடிவத்தில் தட்டச்சு செய்வதற்கென பிரத்தியேகமான எழுத்துருக்களைத் தேடி நீங்கள் அலையத் தேவையில்லை. நீங்கள் விரும்பும் எந்த எழுத்துருவையும் பயன்படுத்தி யுனிக்கோட் வடிவத்தில் தட்டச்சு செய்வதற்கு வரியுருமா வழிகாட்டுகிறது. உங்களுக்கு வந்த மின்னஞ்சல் படிக்க முடியாத வடிவத்தில் இருக்கிறதா? அது பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. இது போன்ற மின்னஞ்சல்கள் எந்த எழுத்துருவில் தட்டச்சு செய்யப்பட்டது என்பதைக் கண்டறிந்து நீங்கள் எளிதில் படித்தறியுமாறு மாற்றித் தருகிறது வரியுருமா. கணியம் பற்றிய அறிவு இல்லையா? அதற்காகவும் வருத்தப்படத் தேவையில்லை. விண்டோஸ் பற்றிய போதிய அறிமுகம் இல்லாதவரும் கூட கணியத்தில் நேரடியாக வரியுருமாவைத் திறந்து தட்டச்சு செய்தல் முதலான பணிகளைச் செய்யலாம். இதுவரை வெளியான எழுத்துருக்கள் மட்டுமல்ல, இனிவரும் எழுத்துருக்களையும் வரியுருமாவில் பயன்பாட்டாளரே இணைத்துக் கொள்ளுமாறு அமைந்து தன் பயன்பாட்டு, எல்லையை, முடிவில்லாமல் விரித்துச் செல்கிறது 'வரியுருமா'. |